Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
கொரோனா தொற்றுக்குள்ளாக அதிகமானோர் இனங்காணப்பட்ட பேருவளை பிரதேசத்தில், முடக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த 11,293 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, பேருவளை பிரதேச செயலாளர் சத்துர மல்ராஜ் இன்று (15) தெரிவித்தார்.
சீனக் கொட்டுவ, பன்னில, கரந்தகொட, கங்கானம்கொட, வலதர, அம்பேபிட்டிய,அக்கரகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, அவர் தெரிவித்தார்.
குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருள்களும் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட கிராமங்களுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கடமைகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர் என, அவர் மேலும் தெரிவித்தார்.
பேருவளை பிரதேசத்தில் மாத்திரம் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான 35 பேர் இதவரை இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த பகுதி அபாய வலயமாக பெயரிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago