Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
பேருவளை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை, 34 ஆக அதிகரித்துள்ளதாக, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பேருவளை பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட, பன்னில மற்றும் சீன கொட்டுவ கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 219 பேர,; கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (14) ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பன்னில, சீன கொட்டுவ, கரந்தகொட, அம்பேபிட்டிய ஆகிய பகுதிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில்; பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 140 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago