2026 மே 11, திங்கட்கிழமை

’பேஸ்புக் பக்கங்களுக்குத் தடையில்லை’

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, பேஸ்புக் கணக்குகள், பேஸ்புக் பக்கங்கள் அல்லது பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் காணப்படும் உள்ளடக்கங்களையோ புகைப்படங்களையோ நீக்கப்போவதில்லை என்று, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனமும் பேஸ்புக் சமூக வலைத்தளமும், எப்போதுமே சர்வதேசத் தரங்களைக் கடைபிடிப்பதாகவும், அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வளர்ந்துவரும் சந்தைகள் தொடர்பில் அவதானிப்பதற்காக, பேஸ்புக் நிறுவனத்தின் குழுவொன்று, இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. அக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகச் சந்திப்பொன்று, கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே, அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், இலங்கை அரசாங்கத்துடனும் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்களுடனும், தமது நிறுவனம், வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .