Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படவிருந்த நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா தொற்றால், திகதி குறிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான இறுதித் தீர்மானம், இம்மாதம் 20ஆம் திகதி எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில், உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் கேட்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு, இரண்டு கடிதங்கள் ஊடாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
எனினும், அவ்விரு கடிதங்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில், உயர் நீதிமன்றத்தை நாடவேண்டிய தேவை, ஜனாதிபதிக்கு இல்லையெனவும், தேர்தல் நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளதென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அனுப்பிவைத்திருந்த பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில், விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டு அடுத்தக் கட்டத்துக்கு செல்வது தொடர்பிலான தீர்மானத்தை எடுப்பதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் அதன் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், ஏப்ரல் 20ஆம் திகதி கூடவுள்ளனரென அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025