2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’பொறாமை வேண்டாம்; வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்’

Editorial   / 2020 பெப்ரவரி 11 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கம் மேற்கொண்ட வீடமைப்புத் திட்டங்களைக் கண்டு பொறாமை கொள்வதற்குப் பதிலாக மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை நிறைவேற்றுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை வௌியிடுவதற்குப் பதிலாக வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும்  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தால் 4 வருடங்களில் அனைவருக்கும் நிழல் தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் 2,562 வீடமைப்புக் கிராமங்களை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் ஊடாக 387,520 பேர் நன்மையடைவதாக குறிப்பிட்டுள்ள அவர்,  அனைவருக்கும் நிழல் தேசிய வீடமைப்புத் திட்டத்தை தற்போது சிலர் விமர்சிப்பதுடன் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த அரசாங்கம் உறுதி வழங்கியதைப் போன்று கிராமத்திற்கு வீடு திட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்யுமாறு சஜித் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .