Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகளுடன் நோயாளி ஒருவர் சிகிச்சைப் பெறுவதால், குறித்த வைத்தியசாலையின் 10ஆம் இலக்க வார்ட் நேற்று (15) இரவு முதல் மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நான்கு நாள்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரரான குறித்த நோயாளி, வெளிகந்த- சேனபுர புனர்வாழ்வு முகாமில் கடமையாற்றுபவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த 10ஆம் இலக்க வார்டை மூடி, அங்கு கடமையாற்றிய 6 வைத்தியர்கள், 16 தாதியர்கள் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதகவும் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago