2025 ஜூலை 05, சனிக்கிழமை

பொலிஸாரை விபத்துக்குள்ளாக்கிய சாரதி தப்பியோட்டம்

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – கச்சாய் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற லொரியொன்றை, பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையில், குறித்த லொரியின் சாரதி பொலிஸ் அதிகாரிகள் மூவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவமொன்று நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார், அங்கு மணல் ஏற்றப்பட்டு புறப்பட தயார் நிலையில் இருந்த குறித்த லொரியை தடுத்து நிறுத்த முற்பட்ட போதே, லொரியின் சாரதி பொலிஸார் மூவரையும் விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் மூவரும் யாழ் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .