J.A. George / 2021 மார்ச் 23 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகடை ஆயுர்வேத சுற்றுவட்டத்தின் அருகே இன்று(23) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
52 வயதான உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் லொறியின் உதவியாளர் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.
வெலிகடை மேம்பாலம் மற்றும் ஆயுர்வேத சுற்றுவட்டத்துக்கு இடைப்பட்ட வலையத்தில் கொழும்பு அவசரநிலை பதிலளிப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சிறிய ரக லொறியொன்றை அவர்கள் சோதனை செய்து கொண்டிருந்தபோது, பத்தரமுல்லையில் இருந்து பொரளை நோக்கி வேகமாக பயணித்த வேன் அவர்கள் இருவரையும் மோதியுள்ளதாக அவர் கூறினார்.
இதனையடுத்து, தலவத்துகொடையைச் சேர்ந்த வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அண்மை காலமாக நாடு முழுவதும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago