Simrith / 2024 டிசெம்பர் 16 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வத்தேகம பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த வீதி விபத்து தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட காருடன் காரின் சாரதியும் மாத்தளையில் நேற்று கைது செய்யப்பட்டதாகவும், காரை மறைப்பதற்கு அவருக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 46 மற்றும் 48 வயதுடைய மாத்தளை மற்றும் உதிஸ்பத்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சந்தேக நபர்கள் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago