2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘பொலிஸ்மா அதிபர் வெட்கப்பட வேண்டும்’

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறமையான ​அதிகாரியொருவரை இடமாற்றுவது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெட்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார் உள்ளிட்ட ஊடகவியலாளர்களை துன்புறுத்தியமைத் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையானது கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன்  பல குற்றவாளிகளை  காப்பாற்றுவதற்காகவே இவர் இடமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொலிஸ் அதிகாரியின் இடமாற்றமானது அவரின் பாதுகாப்பு தொடர்பில் பல கேள்விகளை எழுப்புவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .