Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு விரிவான, புதிய ஒத்துழைப்புகளை வழங்க , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைத்தீவு ஜனாதிபதி ஆகிய இருவரும் இணங்கியுள்ளனர்.
இலங்கையின் 71ஆவது தேசிய தின விழாவின் விசேட அதிதியாக இலங்கை வந்துள்ள, மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகப்பூர்வமாக வரவேற்றப் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப் பொருள் ஒழிப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள விசேட வேலைத்திட்டம் தொடர்பில் மாலைத்தீவு ஜனாதிபதி தமது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
நீண்டகால நட்புறவு நாடுகளான மாலைத்தீவு- இலங்கைக்கிடையிலான உறவை பலப்படுத்தவும் வர்த்தக, சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, கடற்படைத்துறை உள்ளிட்ட விடயங்களில் இரு நாடுகளுக்கிடையில் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்தல், புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளல் தொடர்பிலும் இதன்போது இருவருக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago