J.A. George / 2021 ஜனவரி 18 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் வியாபாரத்துக்கு துணைபுரிந்த குற்றச்சாட்டில் அநுராதபுரம் குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று (18) முற்பகல் 11.15 மணியளவில் அநுராதபுரத்தில் வைத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அநுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 05 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
போதைப்பொருள் வியாபாரத்துக்கு உதவி செய்ததாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 43 வயதுடைய குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சந்தேக நபரை, அநுராதபுரம் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தி 7 நாட்கள் தடுப்புகாவல் உத்தரவொன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago