2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

போதையில் சுக்கானை சுழற்றிய மேலும் 82 பேர் கைது

J.A. George   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 82 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 20ஆம் திகதி முதல் தற்போதுவரை 1398 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 05ஆம் திகதிவரை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்தக் காலப்பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 132 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், 291 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .