Editorial / 2026 மார்ச் 02 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கீழ் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும், போத்தல்கள் மற்றும் கேன்களுக்கு (Cans) எரிபொருள் வழங்குவதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மோசடி செய்பவர்கள் கொள்கலன்களில் எரிபொருளைக் கொள்வனவு செய்து, அவற்றை கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் கிடைத்துள்ள புலனாய்வுத் தகவல்களைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நேர்மையற்ற ஒருசில தரப்பினர் போத்தல்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெற்று, அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, மறு அறிவித்தல் வரும் வரை இவ்வாறான கொள்கலன்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் என அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் நாம் அறிவுறுத்தியுள்ளோம்," எனத் தெரிவித்தார்.
50 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago