2026 மே 01, வெள்ளிக்கிழமை

போராட்டத்துக்கு கூட்டமைப்பு எம்.பிகள் ஆதரவு

Nirosh   / 2021 மார்ச் 13 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(என்.ராஜ்)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 14ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் - நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இன்றையதினம் போராட்டத்துக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியார் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

குறித்த போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .