2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நால்வர் சிக்கினர்

Editorial   / 2019 மார்ச் 21 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிபத்கொட-திப்பிட்டியகொடை பகுதியில், போலி நாணயத்தாள்களை அச்சிட்டுவந்த இடமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த நால்வரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள், போலி நாணயத்தாள்களை அச்சிட காரணமாக இருந்த  பிரதான சந்தேகநபரும் உள்ளடங்குவதாக, கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 1,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 32 உம், 500 ரூபாய் நாணயத்தாள்கள் 7 உம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய கணனி உள்ளிட்ட மேலும் பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு ​அச்சிடப்பட்ட போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்காக, மூவர் களணி-திப்பிடியகொட பகுதிக்கு வந்திருப்பதாக, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .