2026 மே 02, சனிக்கிழமை

போலி வைத்தியர் சிக்கினார்

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியர் போன்று தன்னை அடையாளப்படுத்தி சுற்றித்திரிந்த நபரொருவர், வைத்தியசாலை பொலிஸாரால், நேற்று (09) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்தபோது, குறித்த நபரிடம் தினக்குறிப்பு புத்தகம் ஒன்றும், அலைபேசியும் இருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

25 வயதுடைய குறித்த நபர், திக்வெல்ல- பதீகம பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக, காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காலி பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .