Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டினதும் நாட்டு மக்களதும் முன்னேற்றத்துக்கான சில புதிய அரசியல் முடிவுகளை, மே முதலாம் திகதியின் பின்னர் எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரச அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த ஊழல்மிக்க தரப்புகள், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்கும் நாட்டின் ஜனநாயகத்தையும் நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கும் ஊழல், மோசடிகளற்ற நாட்டை முன்னேற்றுவதற்கு இம்முடிவுகள் உதவுமென அவர் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். அதன் பின்னர், மெதிரிகிரிய நீர் விநியோகத் திட்டத்தின் முதலாவது, இரண்டாவது கட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்.
சுத்தமான புதிய அரசியல் கலாசாரத்தையும் சுதந்திரமான நாட்டையும் உருவாக்கும் நோக்கில் இந்தப் புதிய அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களை தான் ஏமாற்றமாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
'கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட் நிலையில், புதிய அரசாங்கத்தின் மீது பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதேநேரத்தில், மக்களின் வாழ்வாதார நிலையை உயர்த்தும் பலமான உத்தியை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது' என அவர் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்தியானது உச்சபட்சமான சர்வதேச ஆதரவைப் பெற்றுள்ளதோடு, நாட்டின் வரலாற்றின் முதன்முறையாக நாட்டின் தலைவர், ஜி7 மாநாட்டில் பங்குபெறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அத்தோடு, ஜேர்மனியின் பொருளாதார விவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியமான வணிகத் தூதுக்குழுவொன்று நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு, நாட்டிலுள்ள வணிக வாய்ப்புகளை ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலதிகமாக, இலங்கையின் அபிவிருத்திக்கு உதவும்வகையை ஆராய்வதற்காக, ஈரான் அரசாங்கமானது, ஜனாதிபதிக்கு அழைப்பொன்றை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரச சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எவருக்கும் வாய்ப்பளிக்கப்படாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால், அவர்களின் தராதங்கள் பற்றிய கவலையின்றி, அவர்களுக்கெதிராக முழுமையான சட்டம் பயன்படுத்தப்படுமெனவும் அவர் உறுதிப்படுத்தினார்.
22 minute ago
34 minute ago
43 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago
43 minute ago
59 minute ago