2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

முக்கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, உடுகம்பொலவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாய், தந்த மற்றும் அவர்களுடைய ஒரேயொரு 4 வயது குழந்தை ஆகிய மூவரையும் படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலிமட அம்புகேன வத்த மங்கள வசந்த குமார (வயது 35) என்பவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரையிலும்

விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் டிகிரி ஜே. ஜயதிலக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த கொலைச்சம்பந்தமான வழக்கு, நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (19) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் விக்கிரமஆராச்சிகே தர்மசேன பெரேரா (52 வயது), கல்ஜிந்த கும்புறகெதர விமலாவதி (42 வயது), இவர்களுடைய ஒரேயொரு குழந்தையான ஜலத்தி கவிந்தியா (4 வயது) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலைகள், அவரது கோழிப் பண்ணை மற்றும் அன்னாசித் தோட்டத்தில் வேலை செய்த  மேற்படி சந்தேகநபரினால் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அல்லது அதற்கு முந்தைய நாட்களில் புரியப்பட்டிருக்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X