2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மு.கா.வில் இருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி 

ஸ்ரீ லங்‌கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். 

கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நேற்றுச் சனிக்கிழமை (04) இரவு நடைபெற்‌ற உயர்பீடக் கூட்டத்தின்போது ஏகமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, அக்கட்சி அறிவித்துள்ளது. 

தவிசாளர் பதவியில் இருந்துகொண்டு கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டுவரும் பஷீர் சேகுதாவூதை, அப்பதவியிலிருந்து நீக்குமாறு கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்ததாகவும் இதன்போது, செயலாளர் நாயகம் ஹஸன் அலி, மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீட் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைகளை உயர்த்தி இதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் தெரியவருகின்றது.

இதன்பின்னர் பஷீர் சேகுதாவூதைத் தவிசாளர் பதவியிலிருந்து மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் செய்வதாக கட்சியின் உயர்பீடம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

கட்சியை பிளவுபடுத்தம் நோக்கில் செயற்பட்டு வந்தமையினாலேயே, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதற்காக பஷீர் சேகுதாவூத் மீது ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக, கட்சி மேலும் அறிவித்துள்ளது. 

இதேவேளை, நேற்றையதினம் நடைபெற்ற குறித்த உயர்பீடக் கூட்டத்துக்கு பஷீர் சேகுதாவூத் சமுகமளிக்கவில்லையெனத் தெரியவருகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X