Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை நகரத்தில் உள்ள பிரபல பாடசாலை மாணவியை சந்திக்கச் சென்ற இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தங்கல்லையிலிருந்து, பதுளைக்கு வந்த இளைஞனே, பதுளை, பத்தலவத்த, எலவீதியில் சுற்றித்திரிந்த நிலையில், நேற்று அதிகாலை, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தங்கல்லை, இதிபோகுன பகுதியில் வசிக்கும் 19 வயது இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முகப்புத்தகத்தில் அறிமுகமான மாணவி, தன்னை சந்திப்பதற்காக வருமாறு அழைத்ததாகவும், அங்கு வந்து பார்த்த போது, முகப்புத்தகத்தில் இருந்த புகைப்படத்தில் காணப்பட்ட மாணவி இல்லையென, இளைஞன், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
முகப்புத்தகத்தில் இருந்த மாணவிக்கு பதிலாக மற்றுமொரு பெண் அங்கு வந்ததாகவும், அதனையடுத்து, தான் நகரத்தில் சுற்றியதாகவும் கைதுசெய்யப்பட்ட இளைஞன், பதுளை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளாராம்.
சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
14 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago