2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டிக்குள் நசுங்குண்டு சிறுமி பலி

Thipaan   / 2015 நவம்பர் 09 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி வீதியில் மொரட்டுவை பொலிஸ் நிலையத்துக்கருகில் நேற்று (08) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பக்கமாக வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி, வந்த திசையை நோக்கி சடுதியாக திருப்பமுற்பட்டபோது குறித்த சிறுமி, முச்சக்கர வண்டியிலிருந்து தூக்கிவீசப்பட்டுள்ளார்.

வீதியில் வீசப்பட்ட சிறுமியின் மீது முச்சக்கரவண்டி விழுந்தத்தில் படுகாயமடைந்த அவர், லுனாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.

தினபொலிவத்தை, காலி வீதி, மொரட்டுவை என்ற விலாசத்தில் வசிக்கும் லொக்கு லியன ஆராச்சிகே தனஞ்சனி ஹங்சிகா என்ற 6 வயதான சிறுமியே உயிரிழந்தவராவார்.

குறித்த சிறுமியின் தந்தையான முச்சக்கரவண்டிச்சாரதியைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X