Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூத்த பத்திரிகையாளரும், துக்ளக் இதழின் ஆசிரியரும் மறைந்த புரட்சி தலைவி ஜெயலலிதாவின் அரசியல் குருவுமான சோ. ராமசாமி, 84ஆவது வயதில் காலமானார்.
சோ ராமசாமி, மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3.58 மணிக்கு உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
ஜெயலலிதா இறந்த மறுநாளே அவரது அரசியல் குருவும் மறைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
எம்.ஆர்.சி நகரில் உள்ள இல்லத்தில் சோவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் சோவின் உடல் தகனம் செய்யப்படுகிறது. சோவுக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
9 hours ago