2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மின் உபகரணத்தில் கைகுண்டு

George   / 2016 நவம்பர் 13 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஷ் மதுசங்க

வவுனியா தோணிக்கல் லக்ஷபான வீதி பிரதேசத்தில் பழைய இரும்பு பொருட்களை சேகரிக்கும் நிலையத்தில் இருந்து கைகுண்டு, வவுனியா பொலிஸாரால் வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.

பழைய பொருட்களை சேகரிக்கும் நபர் சேகரித்த மின்உபகரணமொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைகுண்டை முதலில் கண்ட கடை உரிமையாளர், பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், கைகுண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .