2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மின்சார கதிரையிலிருந்து மஹிந்தவை காப்பாற்றினோம்:மங்கள

Gavitha   / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மின்சார கதிரைக்கு கொண்டு செல்வதிலிருந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் காப்பாற்றியுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரித்தார்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகரினால் வெளியிடப்பட்ட அறிக்கை இலங்கைக்கு மிகவும் நேர்மையானதாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிணைப்பில் இந்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் கலாசார பிணைப்பினால் 8 மாதங்களுக்கு சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ள முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல, நாட்டில் உள்ள முப்படை வீரர்கள் உள்ளிட்ட இல்கையைச்சேர்ந்த எவரையும் மின்சார கதிரைக்கு கொண்டு செல்லமுடியாது என்றும் அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .