2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முன்னாள் இராணுவ வீரர்கள் உண்ணாவிரதம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனக் கோரி தாம் முன்னெடுத்த போராட்டத்தை, சேவையிலிருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள், இன்று வியாழக்கிழமை (04) முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றியுள்ளனர்.

ஓய்வூதியம் பெற நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையான 12 வருடங்களை பூர்த்தி செய்யாது இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள், கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கடந்த 31ஆம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமது கோரிக்கைகளுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு வழங்கப்படும் வரை, தமது போராட்டம் தொடரும் என, இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் பீ.வசந்த தெரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .