Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 05 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பெரிய பாலத்தடியில் இருந்து வெள்ளிக்கிழமை(4) காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களை, கடற்படையினர் கடலில் வைத்து சோதனையிட்டதோடு அவர்களை திருப்பி கரைக்கு அனுப்பியமையினால் மீனவர்கள் கடற்கரையில் தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மன்னார் பள்ளிமுனை, பனங்கட்டுக்கொட்டு, சாந்திபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்காக மீனவர்கள், மன்னார் பெரிய பாலத்தடி கடற்கரையூடாக வெள்ளிக்கிழமை காலை வழமை போன்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
படகு ஒன்றில் சுமார் 8 மீனவர்கள் தொழிலுக்குச் சென்ற நிலையில் கடலில் நின்ற கடற்படை படகுகளை இடைமறித்து சோதனைகளை மேற்கொண்டதோடு, ஒரு படகில் 3 மீனவர்கள் மாத்திரமே தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்றும், ஏனையவர்கள் திரும்பிச் செல்லுமாறும் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினருக்கு, மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் படகு ஒன்றில் 3 மீனவர்களைத் தவிர ஏனையவர்களை தொழிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும், ஏனையவர்களை திருப்பி அனுப்புமாறும் உத்தரவிட்டதன் காரணத்தினாலேயே கடற்படை குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட கடற்படையினர் மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், படகில் கொண்டு செல்லுகின்ற ஒவ்வெறு பொருட்களுக்கும் பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக கடலில் இருந்த மீனவர்கள், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, குறித்த பிரச்சினைகளை தெரிவித்தபோது, கடற்படையினர் மீனவர்களை இடை மறித்தமைக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஆத்திரமடைந்த மீனவர்கள் அனைவரும் தொழிலுக்குச் செல்லாது கரை திரும்பினர்.
பின்னர், கடற்கரையில் ஒன்று திரண்ட மீனவர்கள் கடற்படையினருக்கும், மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கும் எதிராக தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் வருகை தந்து மீனவர்களுடன் கலந்துரையாடினர்.
இதன் போது மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
எனினும், மீனவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் செயற்பாட்டின் காரணமாகவே மீனவர்கள் பாதிப்பை எதிர்நோக்குவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
56 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
4 hours ago