2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மூன்று பேர் கையேந்தினர்; கான்ஸ்டபிளும் கைதானார்

Gavitha   / 2015 நவம்பர் 09 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்மை பொலிஸார் எனக் கூறிக்கொண்டு சுமார் ஒரு இலட்சம் பணத்தைக் கப்பமாகத் தருமாறு கூறிய மூவரை கைது செய்துள்ளதாக, போத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

காலி பிரதேச உணவகம் ஒன்றுக்குள் நுழைந்த குறித்த மூவர் காலி பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புத் துறை பொலிஸ் அதிகாரிகள் என தம்மைக் கூறியுள்ளனர். அவ்வாறு கூறியதோடு மட்டுமன்றி, தங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணத்தைக் கப்பமாக வழங்குமாறும் உணவக உரிமையாளரிடம் கேட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில், பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து அந்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர், பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X