Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 10 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
“அம்பாறை, இறக்காமம், மாணிக்கமடு, மாயக்கல்லிமலை பிரதேசத்தில் பலாத்காரமாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை, ஒருவார காலத்துக்குள் அங்கிருந்து அகற்றப்படும் என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில், அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், செவ்வாயன்று (08) சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, பிரதமர் மேற்கண்ட வாக்குறுதியை வழங்கினார்” என்று, அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
“அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே, குறித்த சிலை தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றி அமைச்சர் ஹக்கீம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதன்போது எடுத்துரைத்துள்ளார்.
இவற்றை செவிமடுத்த பிரதமர், பலாத்காரமாக நிறுவப்பட்ட சர்ச்சைக்குரிய சிலையை அகற்ற ஒரு வார காலம் அவகாசம் கேட்டுக்கொண்டதுடன், அதற்கான நடவடிக்கைகளை தான் முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்” என, ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில், அமைச்சர் மனோ கணேசனும் பிரசன்னமாகி இருந்தார் என ஊடகப் பிரிவு, மேலும் கூறியது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago