Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜூன் 13 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடு மேர்வின் என்றழைக்கப்படும் வேலாயுதன் மெனியஸூக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக இனங்கண்டு, அவருக்கு தலா 20 வருடங்கள் என்றடிப்படையில் 40 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
2008ஆம் ஆண்டு மேற்கொண்ட ஹெரோய்ன் விற்பனையில் திரட்டிய, 290 இலட்சம் ரூபாய் சொத்தைக் களனியில் கொள்வனவு செய்தார் என்று, அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி எம். ரணவக்க, அவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, 255 இலட்சம் ரூபாய் தண்டம் விதித்தது.
தண்டத்தைச் செலுத்தத் தவறின், அவருக்கான சிறைத்தண்டனையை இன்னும் நான்கு வருடங்களுக்கு நீடிக்குமாறும், நீதிபதி உத்தரவிட்டார்.
குடு மேர்வின், 2012ஆம் ஆண்டு, சிறைச்சாலையிலிருந்து அளுத்கடை நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்றபோது, இனந்தெரியாத நபர்கள் அவரைக் கடத்திச் சென்றுவிட்டனர்.
அதன்பின்னர், பிரதிவாதி இல்லாத நிலையிலேயே வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அவரைக் கைதுசெய்வதற்குத் திறந்த பிடியாணையும் சிவப்பு நோட்டீஸும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி, ஒரு குற்றச்சாட்டுக்கு தலா 20 வருடங்கள் என்றடிப்படையில், 40 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .