2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மேலும் இரு இராஜாங்க அமைச்சர்கள் இராஜினாமா?

Gavitha   / 2017 ஜனவரி 02 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிப்போருக்கு இடையிலான தீர்க்கமானதொரு கலந்துரையாடல், இம்மாதம் இரண்டாவது வார காலப்பகுதியில் இடம்பெறவுள்ளதாக, அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே, இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருப்பவரொருவர் தெரிவிக்கின்றார்.  

இந்தக் கலந்துரையாடலின் போதே, அரசாங்கத்தை விட்டு விலகுவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்றும், அவர் குறிப்பிடுகின்றார்.  

இந்தக் கலந்துரையாடலின் போது, புதிய வருடத்தில் முக்கியமானதொரு தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.  

இது இவ்வாறிருக்க, அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சுப் பதவி வகிக்கும் இருவர், அப்பதவி​களை இராஜினாமா செய்யவுள்ளதாகவும், அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அடுத்த வாரக் காலப்பகுதியில், அவ்விருவரும் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வர் என்றும், அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஏற்கெனவே, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற விவகாரா இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, கடந்த 30ஆம் திகதியன்று, தனது பதவியை இராஜினாமா செய்தார்.  

இவரைத் தொடர்ந்து பலர், அரசாங்கத்தை விட்டு விலகி, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவுள்ளனர் என்று, அவ்வெதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .