Gavitha / 2017 ஏப்ரல் 17 , பி.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக, நாளை (19) திறக்கப்படவுள்ளன என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இப்பாடசாலைகள், ரமழான் நோன்பு விடுமுறைக்காக எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் 27ஆம் திகதி வரை மீண்டும் மூடப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரி, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, தர்கா நகர் தேசியக் கல்விக் கல்லூரி என்பனவும் நாளை புதன்கிழமை திறக்கப்படவுள்ளன.
இதேவேளை, தமிழ், சிங்கள பாடசாலைகள், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக இம்மாதம் 26ஆம் திகதி திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .