Janu / 2026 மே 12 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமடல பகுதியில், கடந்த ஆண்டு இடம்பெற்ற மூவர் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், திங்கட்கிழமை (11) இரவு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (11) இரவு 8:30 மணியளவில் மாமடல பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பலொன்று, இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய வன்முறைக் கும்பல், அவரது தலையைத் துண்டித்து மாமடல சந்தியில் உள்ள ரத்னாவளி தேவி சிலையில் தொங்கவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலின் போது குறித்த நபரின் மாமனார் மீதும் அக்குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர், தற்போது அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட நபர், 2025-ஆம் ஆண்டு இதே மாமடல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து மூவரைப் படுகொலை செய்த வழக்கின் பிரதான சந்தேகநபர் ஆவார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர், கடந்த மார்ச் மாதம் 31-ஆம் திகதியே பிணையில் விடுதலையாகி வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், தப்பிச் சென்ற வன்முறைக் கும்பலைத் தேடிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

12 minute ago
23 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
43 minute ago