2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு: பிரதமர்

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும், அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

இதேவேளை ‘’வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என்ற கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் செப்டம்பர் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமரிடத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை பதிலளிக்கையிலேயே பிரதமர் ஹரினி அமரசூரிய இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

   புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அரசிலமைப்பு இன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய முடியாது. இது தொடர்பான அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளது.  

அத்துடன் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது   என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X