Janu / 2026 ஏப்ரல் 23 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகனின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில், ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ, கொத்தல கெமியாவ பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய ஏ.எச்.எம். தர்மதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு நான்கு மகன்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகனுக்கும் தந்தைக்கும் இடையில் புதன்கிழமை (22) இரவு ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியுள்ளது. இதன்போது மகன் தந்தையை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளதாகவும் இதன்போது தந்தை நிலத்தில் சரிந்து விழுந்ததில், அவரது தலை கட்டிலில் மோதி பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நிலவிய நீண்டகால தர்க்கம் எல்லை மீறியதாலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago