2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மகளிர் கல்லூரியில் அட்டகாசம்: 34 மாணவர்கள் கைது

Editorial   / 2019 மார்ச் 01 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கொள்ளுபிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள மகளிர் கல்லூரியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, பட்டாசுகளைக் கொழுத்தி, அங்கிருக்கும் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 34 மாணவர்களைக் கைதுசெய்துள்ளதாக, கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸை மற்றும் பம்பலபிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த இரு பாடசாலைகளின் மாணவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால், குறித்த மகளிர் கல்லூரியிலுள்ள இரண்டு வாயிற் கதவுகளுக்கும் வாகனங்கள் சிலவற்றுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர்.

இந்த மாணவர்கள், வாகனங்கள் சிலவற்றில் வந்தே, இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாகவும் மகளிர் பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமையவே, மேற்ப​டி மாணவர்கள் கைது​ செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .