S.Renuka / 2026 ஜனவரி 05 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
15 வயதான பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (05) தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மகளிர் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். அவரது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 15 வயதான மகளை, 2024ஆம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத போது,பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு கடந்த பெப்ரவரி மாதம் மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. அதில், 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மகளிர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கருவில் உருவான டிஎன்ஏ மற்றும் குற்றவாளியின் டிஎன்ஏ ஒத்துப்போனது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையானது திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இன்று திங்கட்கிழமை (05) அளித்த தீர்ப்பில், “குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தையும், அவரது தாயும் உச்சபட்ச தண்டனை கோரியுள்ளனர். சொந்த மகளையே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு இந்த நீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
கடந்த 11 நாட்களுக்கு முன்பே இதே நீதிமன்றத்தில், மகளை கர்ப்பமாக்கிய மற்றொரு தந்தைக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, மற்றொரு வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago