Editorial / 2025 ஜூலை 16 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார்.
அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். இந்த ஓவியம் 1974 -ஆம் ஆண்டு பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மகாத்மா காந்தியின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆனது. நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 3 மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓவியருக்கு போஸ் கொடுத்தது இந்த நிகழ்வு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
15 minute ago
8 hours ago
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
8 hours ago
08 Feb 2026