Editorial / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அனுப்பப்படவுள்ள ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (06) கையெழுத்திட்டுள்ளார்.
அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் சட்டமா அதிபரினால் 21 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு வழங்குவதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியால் இன்று சோதிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி கையெழுத்திட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த ஆவணங்கள் வெளிவிவகார அமைச்சினால் கூடிய விரைவில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago