2025 ஜூலை 30, புதன்கிழமை

மக்களின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவிப்பு

Freelancer   / 2022 மே 10 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்த ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மக்களுடைய நலனை இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் ஜனநாயகம், உறுதி தன்மை, பொருளாதார மீட்சி ஏற்படுவதை இந்தியா முழுமையாக ஆதாரவளிக்கிறது.

மிக அருகில் உள்ள அண்டை நாட்டுடன் வரலாற்று ரீதியான தொடர்பை கொண்டுள்ளது இந்தியா. 

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கை மக்களுக்கு ரூ.27,000 கோடி மதிப்புள்ள உதவியை இந்தாண்டு இந்தியா வழங்கியது. தற்போதைய இக்கட்டான சூழலில் இருந்து இலங்கை மக்கள் மீண்டும் வர உதவி செய்தது இந்தியா. 

இந்திய மக்களும் உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளனர். 

எனவே ஜனநாயக முறையில் மக்கள் எடுக்கும் முடிவுகளை இந்தியா ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .