2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மங்களவின் குற்றச்சாட்டை நிராகரித்தார் கோட்டா

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மகன் தொடர்பாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறிய குற்றச்சாட்டை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

இலங்கை உதவி அலுவலகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகப் பயன்படுத்த, 2013ஆம் ஆண்டில், ஏஞ்ஜெல்ஸில் நகரில் வடகைக்கு எடுத்த வீட்டை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரின் மகன் பயன்படுத்தினார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருந்தார்.

இவ்வாறான குற்றச்சாட்டுகளைக் கூறுவது தனது நற்பெயருக்கு பங்கம் செய்வதற்கான மலிவான உபாயம் என, தனது டுவிட்டர் பக்கத்தில் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

கோட்டாபய ராஜபக்ஷவின் மகன், குறித்த வீட்டை ஒரு வருடத்துக்கும் மேலாகப் பயன்படுத்தினார். இதனால், 27.6 மில்லியன் ரூபாய் செலவு ஏற்பட்டதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்றுப் புதன்கிழமை (30) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X