Editorial / 2026 மே 04 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்படுகின்றன.
இந்த நிலையில், கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிறிய பரபரப்பு ஏற்பட்டது. கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் வந்த ஆதரவர்கள் என அனைவரும் மஞ்சள் துண்டு அணிந்து வந்ததால், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து, அவர் மஞ்சள் துண்டை அகற்றிய பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago