2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மட்டக்குளி துப்பாக்கி சூடு 11 பேர் கைது

Kanagaraj   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, மட்டக்குளி, சமித்புர பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 11 பேர், நேற்று (25) இரவு, இரத்தினபுரியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தில் படுகாயமடைந்த எழுவரில் நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே, உயிரிழந்திருந்திருந்ததுடன், ஏனைய மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்தச் சம்பவத்தில், சமித்புர பகுதியைச் சேர்ந்த பிரசாத் சத்துரங்க (வயது 24), தெனுவன் (வயது 26), நுவன் சஞ்ஜீவ (வயது 29), மொஹமட் ஹுஸைன் மொஹமட் நஸார் (வயது 29) ஆகியோரே கொல்லப்பட்டிருந்தனர்.

ஹெரோய்ன் கடத்தலில் ஈடுபடும் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகறாறு காரணமாகவே, இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  

இரண்டு குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், ஒரு குழுவைச் சேர்ந்தவரின் தந்தையின் மரணத்துக்கு வித்திட்டது. இதையடுத்து, அடுத்த குழுவைச்சேர்ந்த ஒருவரின் தாய் கொல்லப்பட்டார். இதுவே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்துக்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.  

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கொழும்பு குற்றப் பிரிவினரை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பணித்தார்.  

அதற்கிணங்க, சந்தேகநபர்களை இனங்கண்டுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஷாந்த சொய்சா தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .