R.Tharaniya / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 4 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியொன்று காத்தான்குடி பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அதே நேரம் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று குறித்த லொறியின் பின்னால் மோதியதன் காரணமாக பாரிய விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
குறித்து விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் பஸ் மீது மோதியுள்ளது இதனால் பஸ்ஸில் நடத்துனர் படுகாயமடைந்தார்.
அதே நேரம் பஸ்ஸின் சாரதி முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் பஸ்ஸின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.மற்றும் சொகுசு பஸ் ஆட்டோ என்பது பெரிதும் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரீ.எல்.ஜவ்பர்கான்
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago