Editorial / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
வெளியாகிய 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சுபைதீன் முஹமட் பர்தான் அகில இலங்கை ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்த்ப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெறுவது என்பது சாதாரண சாதனையல்ல; அது கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
அகில இலங்கை ரீதியில் வர்த்தகத் துறையில் முதலிடம் பெற்றுள்ளது அம்மாணவனின் துறைசார்ந்த ஆளுமையை வெளிப்படுத்துகிறது.
காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வி நிறுவனம் என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாறான தேசிய மட்ட வெற்றிகள் மேன்மேலும் உத்வேகத்தை அளிக்கும்.
மாணவன் பர்தானின் எதிர்காலக் கல்விப் பயணங்கள் சிறக்கவும், அவர் ஒரு சிறந்த கணக்காய்வாளராகவோ அல்லது வர்த்தக மேதையாகவோ நாட்டுக்குச் சேவையாற்றவும் வாழ்த்துகிறேன். இந்த வெற்றியில் பங்கெடுத்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாராட்டுகள்.
14 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago