Lenin Raj / 2026 ஏப்ரல் 03 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள புதிய அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் விலை வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் அளவீடான பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை, கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 109 டொலருக்கும் அதிக விலையில் விற்பனையாகின்றது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றமும், விநியோகத் தடையும் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் தொடங்கிய காலத்திலிருந்து தற்போது வரை கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .