2025 மே 08, வியாழக்கிழமை

மாணவி அம்ஷிகாவின் விவகாரம்: ஆசிரியருக்கு இடமாற்றம்

Editorial   / 2025 மே 08 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 ஆம் ஆண்டில், கொழும்பில் உள்ள ஒரு பாடசாலையில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சம்பந்தப்பட்ட அமைதியின்மை சம்பவம் குறித்து அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது என கல்வியமைச்சு, வியாழக்கிழமை (08) மாலை ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

அது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் விளக்கம் கேட்கவும்,   சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுத்தது. இந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது, அது கிடைத்தவுடன் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது,

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதன் பின்னர், மனஉளைச்சலுக்கு உள்ளாகி  தன் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி அம்ஷிகாவின் சாவுக்கு நீதி கேட்டு, கொழும்பில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள், வியாழக்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X