S.Renuka / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகப் பகுதிகளில் ஏற்படவிருக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை (18) அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை அதிகாலை 2.30 மணி வரை அமுலில் இருக்கும்.
எச்சரிக்கை மட்டம் 3 – வெளியேறுங்கள் (சிவப்பு)
கண்டி மாவட்டம்: தொலுவ, உடுதும்பற, மெததும்புற
நுவரெலியா மாவட்டம்: வலப்பனை,ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட
எச்சரிக்கை மட்டம் 2 – அவதானமாக இருங்கள் (அம்பர்)
கண்டி மாவட்டம்: கங்கவட்டக் கோறளை, பாதஹேவாஹெட்ட, அக்குறணை, யட்டிநுவர, தும்பனே, ஹாரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய
பஸ்பாகே கோறளை, ஹதரலியத்த, குண்டசாலை, உடுநுவர, தெல்தோட்டை, பாததும்புற, பன்வில, உடபலாத, மினிப்பே,
கங்க இஹல கோறளை
குருநாகல் மாவட்டம்: ரிதிகம
நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா
15 minute ago
23 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
42 minute ago