Editorial / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கையை மீண்டும் புதன்கிழமை (17) அன்று அச்சுப் பிரதியாக ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (16) அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து புதன்கிழமை (17) அன்று சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மீண்டும் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர்.
இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதிபதி மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை குற்றத்தடுப்பு பிரிவினர் பெற வேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும் புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிடப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
24 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
44 minute ago
1 hours ago