Editorial / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்
மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில், புதன்கிழமை (17) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டு தீவகத்தை இராணுவம் கைப்பற்றியது. அந்தச் சமயம், மண்டைதீவில் உயிருடன் பிடிபட்ட பொதுமக்களில் பலர் இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து செயல்பட்ட துணைக் குழுக்களாலும் கொல்லப்பட்டனர்.
அவர்களின் சடலங்கள் தேவாலய காணியிலுள்ள கிணறு உட்பட 3 கிணறுகளில் போடப்பட்டு மூடப்பட்டன என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் விசாரணை நடத்தி அந்தக் கிணறுகளை சட்ட ரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவங்களுக்கு கண்கண்ட சாட்சியங்கள் மற்றும் மத குருமார் சிலரும் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் புதன்கிழமை (17) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் அகழ்வு பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம் பாரப்படுத்தப்பட்டது.
அத்துடன், மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கு பொலிஸார் கால அவகாசம் கோரியமையால் வழக்கை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
6 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago